கொழும்பு துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடன் போட்டுக் கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிராகரித்து விட்ட இலங்கை தற்போது அதனை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடன் கொழும்புத் துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பாக போட்டுக்கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை சில மாதங்களுக்கு முன்பாக நிராகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கொழும்பு துறைமுகத்தை விரிவு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏல முறையில் தேர்வு செய்யப்பட்ட சைனா ஹார்பர் இன்ஜினியரிங் என்னும் சீன நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள சீன நிறுவனத்தினை இலங்கை நாட்டின் கப்பல் துறை அமைச்சர் தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இலங்கையின் கப்பல் துறை அமைச்சர் தேர்வு செய்த சீன நிறுவனத்திற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.