Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 காட்டு யானைகள் தாய்முடி எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள டீ கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து காட்டு யானைகள் மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தின்று’ நாசப்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் யானைகள்  முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |