Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுப்பார்களா…? சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொடைக்காலூர் பகுதியில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மண் பாதை வழியாக இறந்தவர்களின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால் இறந்தவர்களின் உடலை சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |