‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021