பிரபுதேவா நடிக்கும் ‘பிளாஷ் பேக்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவரின் நடிப்பில் பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன.
இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டான் சாண்டி இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ”பிளாஷ்பேக்” என பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ரெஜினா கெஸன்ட்ரா நடிக்க இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Happy to announce that Our next project titled as #FlashBack 🌀 First look releasing tomorrow.
Starring : @PDdancing @ReginaCassandra @anusuyakhasba
✍️ 🎬 @DonSandyDir
🎶 @SamCSmusic
🎥 @DopYuva
✂️ @Sanlokesh
🏢 @moorthy_artdir pic.twitter.com/O7Yd5NorT0— ABHISHEK FILMS (@Abhishek_films_) November 24, 2021