Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு ரூ.3000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 1,59,481 மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இந்த நிவாரண தொகை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்ற முதல்வர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கப்படும் என்றும், மழை மற்றும் வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |