நைஜீரியாவில் பாம்பு கடித்து பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா தலைநகர் அபுஜாவில் லான்ஸ் பெர்சி என்பவர் வசித்து வந்தார். இவர் விமானப்படை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் தன் வீட்டில் உள்ள வெஸ்டர்ன் கழிப்பறையின் மீது லான்ஸ உட்கார்ந்து இருந்தபோது அவரை பாம்பு கடித்தது. இதனால் பாம்பு விஷம் லான்ஸ் உடல் முழுவதும் பரவி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து லான்ஸ் பெர்சியின் தோழி கூறியபோது “நாம் இருவரும் நேற்று பேசியது கூட நினைவில் உள்ளது. ஆனால் இப்போது நீ உயிருடன் இல்லை. இதை நினைத்தால் என் இதயத்தில் இருந்து ரத்தம் வடிகிறது. எனவே அனைவரும் உங்கள் வீடு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.