Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவை பிறப்பித்துள்ளார். வடகிழக்கு கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |