நகுல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது எரியும் கண்ணாடி, வாஸ்கோடகாமா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இவர் சுருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.