Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் தலைமையில் “ஜனநாயக உச்சிமாநாடு”.. தைவான் நாட்டிற்கு அழைப்பு.. கடும் கோபத்தில் சீனா..!!

அமெரிக்காவின் தலைமையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் காணொலிக் காட்சி வாயிலாக ஜனநாயக உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது.

அமெரிக்காவின் தலைமையில், நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சார்பில் உலகின் சுமார் 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

ஜனநாயக நாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. மேலும், வாய்ப்புகள் மற்றும் சவால்களை சந்திப்பது தொடர்பில் தலைவர்கள் கலந்தாலோசிக்க இந்த உச்சி மாநாடு உதவியாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, இந்தியா, ஈராக், பாகிஸ்தான் உட்பட 110 நாடுகளை  அமெரிக்கா அழைத்திருக்கிறது. எனினும், ரஷ்யா, துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனினும், அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு அழைப்பு விடுத்தது, சீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |