Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த ‘எனிமி’ பட பாடல்… வெளியான கலக்கல் தகவல்…!!!

எனிமி படத்தில் இடம்பெற்ற டும் டும் வீடியோ பாடல் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் ஆனந்த் சங்கர். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படத்தில் ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Tum Tum Song Lyrics - Enemy(2021)

மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டும் டும் பாடல் வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |