Categories
மாநில செய்திகள்

இன்று இரவு உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை….!!!!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை மாற்றமில்லாமல் நிலவுகிறது. அதனால் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கூடுதலாகும். இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனால் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும். மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |