Categories
உலக செய்திகள்

“பல்கேரியாவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து!”.. உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரிப்பு..!!

பல்கேரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு மசிடோனியா நாட்டிலிருந்து 50க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் துருக்கி சென்றிருக்கிறார்கள். அவர்கள், துருக்கியில் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பேருந்து, பல்கேரியா நாட்டின் வழியே சென்றிருக்கிறது.

அப்போது, அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் போஸ்னெக் என்ற கிராமத்திற்கு  அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக சென்றது. ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயற்சித்தும் அவரால் முடியாமல் போனது.

அதன்பின்பு, சாலையோரம் இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியதில், பேருந்து தீ பற்றி எரிந்தது. எனவே, பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கதறி கூச்சலிட்டனர்.  எனினும் சிறிது நொடிகளுக்குள் பேருந்து முழுக்க தீ பற்றி எரிந்து அனைத்து சுற்றுலா பயணிகளும் தீயில் மாட்டிக்கொண்டனர்.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் 12 குழந்தைகள் உட்பட 46 நபர்கள் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர். ஏழு நபர்களை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |