தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 516 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.