Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தூக்குங்கய்யா… தூக்குங்க….. பெண் காவல் அலுவலரை தூக்கிச்சென்ற காவலர்கள்…!!

காவல்துறை பெண் உயரலுவலரை நாற்காலியில் அமர வைத்து காவல் துறையினர் தூக்கிச்சென்றனர்.

புதுச்சேரியில் வடக்கு பகுதி சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் ரச்சனா சிங் (ஐ.பி.எஸ்). இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதிக்கு கண்காணிப்பாளராக பணி மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஏனாம் பகுதியிலிருந்து மீண்டும் புதுச்சேரிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ரச்சனா சிங்-ஐ ஏனாமில் இருக்கும் காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து அவருடைய வாகனமிருக்கும் இடம் வரை தூக்கிச் சென்று வழியனுப்பி வைத்தனர்.

காவலர்களுக்குள்ளான இந்த பாசப் போராட்டத்தை சக காவலர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Categories

Tech |