தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள், போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் “உங்கள் நூலகம் உள்ளங்கையில்” எனும் செல்போன் செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்துள்ளார். போட்டித் தேர்வு, வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களை இதில் அறிந்து கொள்ள. இதே போன்ற “TN Employment News” என்ற செல்போன் செயலி மற்றும் www.tnemployment.in என்ற இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இது மாணவர்களுக்கு மிக உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.