Categories
மாநில செய்திகள்

24மணி நேரம் டைம்…! 1இல்ல, 2இல்ல 7மாவட்டம்…. இடி, மின்னலுடன்…. கடும் எச்சரிக்கை …!!

நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்க கடல்பகுதியில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனவும், இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்க கடல் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |