அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் என்பது குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மெகா ஏலம் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் உள்ள முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை விடுவிப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது .அதேசமயம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகமும் ஒரு அணியில் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்என்பதை இதுவரை தெரிவிக்காமல் இருக்கின்றது .இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் அஸ்வின் அந்த அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,” எனக்குத் தெரிந்து அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் தக்கவைக்க வாய்ப்பே இல்லை .அதே போல் இந்த லிஸ்டில் நானும் இருப்பேன் “என வீடியோ ஒன்றில் சூசகமாக கூறியுள்ளார். இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா அக்சர் பட்டேல், ஆவேஷ் கான் மற்றும் ரபாடா ஆகிய வீரர்களை தக்க வைக்க முயற்சி மேற்கொள்ள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.