நாடு முழுவதும் கொரோனவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், “பிரதமர் தொடங்கி வைத்த ஹர்கர் தஸ்தக் என்ற தீவிர தடுப்பூசி பரப்புரை வரும் 30 -ம் தேதிவரை தொடர்ந்து நடைபெறும். விடுபட்டவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளார்.