Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வெற்றி பெற எளிதான வழி பிறக்கும்”.. யாரிடமும் ரகசியங்களை பகிராதீங்க..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகவே இருக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும்.

பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் இருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் இருக்கட்டும். யாரிடமும் எந்த விதமான ரகசியங்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது மட்டுமில்லாமல் இன்று வாக்குறுதிகளையும் நீங்கள் கொடுக்க வேண்டாம். பொறுமையை  மட்டும் கையாளுங்கள் அது போதும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை நீங்கள் தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |