Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா…..? வெளியான தகவல்….!!!

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | nakkheeran

 

இதனையடுத்து, இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் முதலில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் அரவிந்து சுவாமி தேர்வானார். அப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்ததாக இந்த படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Categories

Tech |