Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… தேர்வு பற்றி பயப்படாதீங்க… அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அதை மறைக்காமல் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.  தேர்வு தொடர்பாக பள்ளி மாணவர்கள் அச்சம் அடைய வேண்டாம். பொது தேர்வுக்கு முன்பு பருவ தேர்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |