அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு முதல் அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள், ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்பட உள்ளது.
இதனால் புத்தகங்களின் விலை உயரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மூலப்பொருட்களின் விலை உயர்வால் டிவி, ஏசி, பிரிட்ஜ், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களின் விலை உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ந்து விலை ஏறி கொண்டே சென்றால் மக்கள் என்னதான் செய்வார்கள் என்று பலரும் புலம்பி வருகின்றனர்.