இந்திய நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு இதுவரை அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் முதல் முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய தகவலை டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பை நேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதேவ் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியது,” மத்திய அரசு சாதாரண மக்களுக்காக தனது கொள்கைகளை உருவாக்கி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய வேண்டும் என விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட 742 மாவட்டங்கள், கிராமங்கள் மற்றும் நகர்புறம் போன்றவற்றில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பின் மூலம் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களது ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலை ஆகியவற்றை அரசு அறிய முடியும்” என்று அவர் தெரிவித்தார்.