Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சோகம்…. சிலிண்டர் வெடித்து விபத்து… தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி!!

சேலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் கோபியின் தாயார் ராஜலட்சுமி இன்று வழக்கம் போல் காலை எழுந்தவுடன் டீ போடுவதற்காக இன்று காலை 6:30 மணியளவில் சமயலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைக்க முயன்ற போது, சமையல் சிலிண்டர் வெடித்து வீடு தரை மட்டமானது.. மேலும் அருகிலிருந்த கணேசன், தீயணைப்பு வீரர் பத்மநாபன் வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.. இந்த சத்தத்தை கேட்டு அந்த தெரு மக்கள் அதிர்ச்சியடைந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்..

இதையடுத்து தீயணைப்பு படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 10 வயது சிறுமி உட்பட 12 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ராஜலட்சுமி(70) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது.. கிட்டத்தட்ட 6 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய பத்மநாபன் என்ற தீயணைப்பு வீரரும், அவரது மனைவி தேவி, பக்கத்து வீட்டில் இருக்கக் கூடிய முருகன் என்பவரது 18 வயதான மகன் கார்த்தி ராம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்..

இந்த விபத்தில் ஏற்கனவே ராஜலட்சுமி என்பவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் பத்மநாபனும், அவரது மனைவி தேவி, கார்த்திக் ராம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் கோபி என்பவர் மட்டும் 80% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ மழைக்காலம் என்பதால் தொடர்ந்து பத்பநாபன் 24 மணி நேர செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தங்கி இருக்கிறார்.. நேற்று இரவுதான் ஒரு நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்ததாக உடன் பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ளார்கள்.. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பத்மநாபன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கோபி என்பவரது வீட்டில் பயன்படுத்த கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்ததனால் ஏற்பட்ட விபத்து தான் இதற்கான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |