பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது .
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான 16 பேர் கொண்ட வங்காளதேச அணி அறிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேச அணி: மொமினுல் ஹக் (கேப்டன்), ஷாத்மான் இஸ்லாம், சைஃப் ஹசன், நஜ்முல் ஹொசைன், முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெஹிதி ஹசன், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், எபாடோட் ஹொசைன், அபு ஜெய்த், யாசிர் அலி, மஹ்முதுல் ஹசன், ரெஜவுர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன்.