மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் காரணமாக நீட் முதுகலை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இட ஒதுக்கீடு சொல்லுமா, செல்லாதா என நீதிமன்றம் முடிவு செய்யும் வரை நீட் முதுகலை கலந்தாய்வு தொடங்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்த நிலையில் மருத்துவ இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட உள்ளனர்.