Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணலுனு சொன்னாரா’… திமுக செய்றது அப்படித்தா இருக்கு… இபிஎஸ் எச்சரிக்கை…!!!

அம்மா மருந்துகளை மூட திமுக அரசு முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணல் என்று கூறுவது போல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தெரியாத இந்த அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களுக்கு மூடுவிழா கண்டு வருகின்றது. அம்மா உணவகத்திற்கு மூடுவிழா, மதுரையில் திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகாரிகள் உணவு தயாரிக்கும் பொருட்களை வழங்காததால், இன்று உணவு வழங்கவில்லை. இதனால் ஏழை எளிய தொழிலாளர்கள் பசியோடு பணிகளுக்கு சென்றதாக பேட்டியளித்தனர்.

அதேபோல அம்மா சிமெண்ட் விற்பனையை மூடிவிட்டு வலிமை என்ற பெயரை மாற்றி விற்பனை செய்கிறது. இந்த அரசு  அம்மா குடிநீருக்கு மூடுவிழா செய்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான குடிநீரை கிடைக்கவிடாமல் செய்துள்ளது. அம்மா மினி கிளினிக் பதிலாக இல்லம் தேடி மருத்துவம் என்று பெயர் மாற்றம் செய்து செயல்படுத்தி வருகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஏழை எளிய மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட எண்ணற்ற நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்து வருகிறது இந்த திமுக அரசு.

இப்போது அம்மா மருந்தகங்களை மூடுவதற்கு முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்களின் மருந்து செலவு பெருமளவு அதிகரித்ததால் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டுமென்பதற்காக அம்மா மருந்தகம் திறக்கப்பட்டது. குறிப்பாக இருதய நோய், இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அம்மா மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் 20 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கப்பெற்றது. இதனை மூடுவதற்கு திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை மூடுவிழா செய்து நிதிச்சுமையை காரணம் காட்டி வருகின்றது. அதே போல தான் நிதிச்சுமையை காரணம் காட்டி அம்மா மருந்துகளை மூட முடிவு செய்து விட்டதாக தகவல் வருகின்றது. இந்த முடிவை அரசு கைவிட விட்டால் மக்கள் கொதித்து எழுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |