Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து… பாலியல் வன்புணர்வு செய்த காமுகன்…. மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கங்காணிப்பட்டி அருகே இருக்கும் பரவாமதுரையைச் சேர்ந்த  சின்னாண்டி என்பவரது மகன் 34 வயதான ராஜ்குமார், 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை  கடந்த ஆண்டு (2020) குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு சேர்த்துள்ளான்.. ராஜ்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆன நிலையில், இந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி கருவை கலைக்கவும் கட்டாயப் படுத்தியுள்ளான்..

இதுகுறித்து அந்த சிறுமி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த ஆண்டு போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.. இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நீதிபதி ஆர். சத்யா தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தத குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ 20 ஆயிரம் அபராதமும், சிறுமியை  மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்..

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், மேலும் 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.. தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு தொடர்ந்து கடுமையான தண்டனை வழங்கி வருகிறது.. இதுவரை 3 பேருக்கு தூக்கு, ஒருவருக்கு சாகும்வரை ஆயுள் வழங்கிய நிலையில், இன்று ஒருவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார்..

Categories

Tech |