இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அதில், நாங்கள் பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் தல ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்படுவது வழக்கம் தான். அதனை பெரும்பாலான கட்சிகள் நிறைவேற்றி விடும். அதனை போலவே ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய இந்த திட்டமும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே பெண்களுக்கு மிகப் பெரிய அதிகாரமளிக்கும் திட்டமாக இந்த திட்டம் இருக்கும். ஒரு குடும்பத்தில் 3 பெண்கள் இருந்தால் அனைவருக்கும் ரூ. 1,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.