ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்காக இந்திய அணியை இப்போதே தயார் படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது,” டி20 போட்டியில் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள். இதனால் சீனியர் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம் எனக் கூறியுள்ளார்.
தற்போது இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட்,, வெங்கடேஷ் அய்யர், தேவ்தத் படிக்கல் ஜெய்ஸ்வால் ஆகியோர் எதிர்கால இந்திய அணியில் சூப்பர்ஸ்டார் வீரர்களாக திகழ்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி இந்திய அணியின் பயிற்சியாளராக எனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது என்பதாலும், அதோடு பயிற்சியாளராக 300 நாள் கிட்டதட்ட இந்தியாவில் செலவாகும் என்பதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.