இந்தியாவிலும் ஜவுளித் துறையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக நூல் விளங்குகிறது. அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் ஜவுளித் தொழில் சீரான முறையில் நடைபெறும். ஆனால் கடந்த சில நாட்களாக நூல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து , ஈர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர் 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில், பருத்தி ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.