Categories
தேசிய செய்திகள்

“உலகில் ஊழலில் முதலிடம் பிடித்தவர் முன்னாள் முதல்வர்”…. கிண்டல் செய்த ஷோபா….!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா கட்சி கிராம ஸ்வராஜ் பாதை யாத்திரை என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மண்டியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பா.ஜனதா கட்சி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை விட பெரிய அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உலகிலேயே ஊழலில் முதலிடம் பிடித்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பிரதமராக இருக்கின்ற மோடி மீது இதுவரை ஒரு புகார் கூட இல்லை.

அதனை தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வெளிநாடு பயணம் செய்த அவருக்கு உரிய மரியாதை மற்றும் வரவேற்பு சரியாக கிடைக்கவில்லை. ஆனால் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் சென்றால் ஒட்டுமொத்த உலகமும் ஒன்று கூடி வரவேற்பார்கள். இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவேன் என்று உறுதி அளித்தார். அதன்படி அவர் இதுவரை நடந்து கொண்டு வருகிறார். மேலும் இந்தியாவை தயாரிப்பும் திட்டத்தில் ஆயுதப் படைகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் வழங்கப் படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வரப்பா பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவரான சித்தராமையா, டி.கே.சிவகுமார் பொய் பேசுவதில் போட்டி போட்டு செயல்படுகிறார். சித்திரையாமைக்கு பொய் பேசுவதில் நோபல் பரிசு வழங்கலாம். மேலும் கொரோனா தடுப்பூசி வந்தபோது காங்கிரஸார் அது பற்றி தவறான பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இன்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக போட்டி போடுகிறார்கள் என்று அவர் கூறினார்.

Categories

Tech |