Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி என்று படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு பரவி வரும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும், 9 , 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |