காங்கோ நாட்டில் மர்ம நபர்கள் சிலர் சீன தங்க சுரங்கத்திற்குள் புகுந்து 8 சீனர்களை கடத்திச் சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சீன தங்க சுரங்கம் ஒன்று காங்கோ நாட்டின் தெற்கு கிவு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் திடீரென மர்ம நபர்கள் சிலர் சீன தங்க சுரங்கத்தின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ராணுவ வீரர் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த மர்மநபர்கள் 8 சீனர்களை கடத்திச் சென்றதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.