மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வளமான வாழ்க்கை வாசல் கதவை வந்து தட்டும். புகழ் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். மனம் ஆனால் சோர்வாக இருக்கும். கூடுமானவரை நீங்கள் இன்று சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசியல் துறையினர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மன கவலை இன்று ஏற்படும்.
உடல் சோர்வு இன்று அதிகமாக இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆன்மிகத்தில் நாட்டமும் மன தைரியமும் உங்களுக்கு இன்று ஓரளவு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது மிகவும் நல்லது. எந்த காரணத்தை கொண்டும் மற்றவர்கள் மீது கோபப்படாமல் பேசுங்கள். கூடுமானவரை அக்கம் பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். சில முக்கியமான பணியாக இருந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொள்ளாதீர்கள். இன்று இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் இருக்கும்.
கூடுமானவரை ஆசிரியர்கள் சொல்வதை கவனமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று சக மாணவருடன் எந்தவித சண்டை சச்சரவுகள் வேண்டாம். பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டநிறமாக இருக்கும். வெள்ளை நிறத்தை அணிந்து கொண்டு முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாடு உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாக அமையும். அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். உங்களுடைய காரிய வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்