இஸ்ரேல் நாட்டில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜெருசலேம் நகரத்தில் இருக்கும், அல் அக்சா என்ற புகழ் வாய்ந்த மசூதிக்கு அருகில், ஒரு மர்ம நபர் தானியங்கித் துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், காவல்துறையினர் உட்பட நான்கு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.
எனவே, காவல்துறையினர் அந்த நபரை நோக்கி சுட்டதில் அவர் பலியானார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.