Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணமானதை மறைத்த பெண்… கைவிட்ட கள்ளகாதலன்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமானதை மறைத்து கள்ளகாதலனுடன் சென்ற பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாந்தாளி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையிலும் நந்தினி கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 16ம் தேதி நந்தினி குழந்தையை அழைத்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தையை தாயாரிடம் விட்டு விட்டு வெளியே சென்ற நந்தினி திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து அவரது தாயார் தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மணக்குடி பகுதியில் மர்மமான முறையில் நந்தினி இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் விவேக் என்பவருடன் தனக்கு திருமணம் ஆகவில்லை என கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்த நந்தினி சொந்த ஊருக்கு வந்து குழந்தையை தாயிடம் விட்டு விவேக் வசிக்கும் தனியார் விடுதி அறைக்கு சென்றுள்ளார். அந்த விடுதியில் 2 நாட்கள் நந்தினி விவேக்குடன் வசித்துள்ளார். அப்போது நந்தினி திருமணமானவர் என்பது விவேக்கிற்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விவேக் கேட்டபோது நந்தினி தனக்கு திருமணம் நடைபெற்றதையும், குழந்தை இருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையறிந்த விவேக் ஆத்திரமடைந்து நந்தினியை வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த நந்தினி விவேக்கிற்கு தெரியாமல் விஷம் குடித்துள்ளார். இதற்குப்பின் விவேக் இருசக்கர வாகனத்தில் நந்தினியை அழைத்துக்கொண்டு மணக்குடி அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.  மேலும் விஷம் குடித்ததால் நந்தினி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விவேக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |