Categories
உலக செய்திகள்

“போதை பொருள் விருந்தில் பங்கேற்பு!”.. விபத்தில் பலியான மாடல் அழகிகள் குறித்து வெளியான தகவல்..!!

இந்தியாவில் வாகன விபத்தில் பலியான கேரள அழகி மற்றும் அவரின் தோழி தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அன்சி கபீர் என்ற 26 வயது இளம்பெண், கடந்த 2019 ஆம் வருடத்தில், மிஸ் கேரளா பட்டம் பெற்றார். அதே அழகிப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்த, அஞ்சனா சாஜன், அன்சி கபீருக்கு நெருங்கிய தோழியானர். அதன் பின்பு, இவர்கள் இருவரும் திருச்சூரை இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து வாகனத்தில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தபோது, வாகனம் விபத்துக்குள்ளானது.

பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே தோழிகள் இருவரும் பலியானார்கள். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விபத்து நேர்வதற்கு முன் இருவரும் வசித்த விடுதியில் பிரபலங்கள் மட்டும் பங்கேற்கும் போதை விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

சைஜு என்ற நபர் தான், இவர்கள் இருவரையும் போதைப்பொருள் விருந்துக்கு வருமாறு வற்புறுத்தியிருக்கிறார். எனவே வாகன விபத்தில் பலியான மாடல் அழகிகளுக்கும், வேறு போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

Categories

Tech |