தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது. பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
தற்போது கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு தொடர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.