Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க மோசமானவங்கள்ல முக்கியமானவங்கே…’ – டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து இப்படியும் ஓர் சாதனை!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், அதிக வைடுகள் வீசிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வாட்லிங், சாண்ட்னர் அதிரடியால் ரன்குவிப்பில் ஈடுபட்டது.

Image

இதில் நியூசிலாந்து அணியின் பிஜே வாட்லிங் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தையும், மிட்சல் சாண்ட்னர் தனது முதல் சதத்தையும் பதிவு செய்து அசத்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 615 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

Image

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட்டின் தந்தை என மார்தட்டிகொள்ளும் இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அச்சாதனையானது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் அதிக வைடுகளை வீசிய முதல் அணி என்பது தான்.  நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் 21 வைடுகளை வீசியதன் மூலம் இந்த மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

Categories

Tech |