தமிழகத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருது, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்ய பரிந்துரை வரவேற்கப்படுகின்றன.தகுதியானவர்கள் தாங்கள் செய்த பணி மற்றும் சாதனைகளை விண்ணப்பத்துடன் இணைத்து ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற 30-ஆம் தேதிக்குள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பம் என எழுதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 5வது தளம், ஆட்சியர் அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
தமிழகத்தில் சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது”…. விண்ணப்பங்கள் வரவேற்பு….!!!!
