Categories
உலக செய்திகள்

“நன்றி தெரிவிக்கும் நாள்!”.. 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்த அமெரிக்க அதிபர்..!!

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு, அதிபர் ஜோ பைடன் 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார் .
வட அமெரிக்காவில், ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்பது பாரம்பரியமாக கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். இந்த நாளானது, தற்போதைய காலகட்டத்தில் சமூகம், அரசியல், கலாச்சாரம் மற்றும் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக்கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில், அமெரிக்க மக்கள், நன்றி தெரிவிக்கும் நாளன்று, வழக்கமாக வான்கோழியை சமைத்து சாப்பிடுவார்கள். எனினும், அமெரிக்க நாட்டின் அதிபர், நன்றி தெரிவிக்கும் நாளுக்கு முன்பாக 2 வான்கோழிகளுக்கு மட்டும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதும், பாரம்பரியமாக கடைப்பிடிக்கிறார்கள்.
அதிபர், பொதுமன்னிப்பு அளித்த 2 வான்கோழிகளை, விலங்குக் காப்பகத்திற்கு பரிசாக வழங்குவார்கள். அதன்படி, இந்த வருடமும் நன்றி தெரிவிக்கும் நாளிற்காக ‘ஜெல்லி’ மற்றும் ‘பீனட் பட்டர்’ என்ற 2 வான்கோழிகளுக்கு அமெரிக்க அதிபர், ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பொதுமன்னிப்பு வழங்கினார்.

Categories

Tech |