கார் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒரு மாணவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவர் காரில் கொட்டாம்பட்டி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாண்டாங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வேகமாக வந்த லாரி பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.