சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின், கலைஞர் மற்றும் தோனி இருவரும் நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை அறிந்தவர்கள், நிரூபித்தவர்கள். சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவிற்கு தோனி ரசிகராக வந்துள்ளேன்.
எனது தந்தை கருணாநிதி, எனது பேரப் பிள்ளைகள் அனைவரும் தோனியின் ரசிகர்கள் தான். தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர். தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் என்றிருந்தாலும் தமிழகத்தின் செல்லப் பிள்ளையாகி விட்டார். இன்னும் பல தேசங்களுக்கு சிஎஸ்கே அணிக்கு தோனி தலைமை தாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.