பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டிலேயே சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் அடுத்த சில நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊதியம் இன்னும் உயர்த்தப்படவில்லை. அதனால் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பொதுத்துறைவங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து விட்டன. ஆனால் பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பொதுத்துறை காப்பீட்டு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.