Categories
உலக செய்திகள்

“4 காதுகளுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி!”.. இணையதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!!

துருக்கி நாட்டில் பூனைக்குட்டி ஒன்று நான்கு காதுகளுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில், ஒரு பூனைக்கு 6 குட்டிகள் பிறந்துள்ளது. அதில் ஒரு குட்டி 4 காதுகளுடன் பிறந்திருக்கிறது. அந்த பூனை குட்டிக்கு மிடாஸ் என்று பெயரிட்டுள்ளனர். மரபணு குறைபாட்டால் நான்கு காதுகளுடன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடாஸை ஒரு தம்பதியர் வளர்த்து வருகிறார்கள்.

இந்த பூனைக்குட்டிக்கு மரபணு குறைபாடு தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாதாரணமாக, பிற பூனைகள் போன்று இதற்கும் காதுகள் நன்றாக கேட்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது மிடாஸ் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

Categories

Tech |