Categories
சினிமா தமிழ் சினிமா

‘கனெக்ட் படத்தில் இந்த இரண்டும் கிடையாது’… இயக்குனர் சொன்ன தகவல்…!!!

கனெக்ட் படத்தில் பாடல்கள், காமெடி ஆகிய இரண்டும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா ‘கனெக்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

Nayanthara new movie connect maya director ashwin saravanan vignesh shivan  | Galatta

இந்நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் கனெக்ட் படத்தில் பாடல்கள், காமெடி ஆகிய இரண்டும் கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நேரத்தில் தான் இந்த படத்தின் கதையை எழுதியதாகவும், இதுகுறித்து நயன்தாராவிடம் கூறியபோது அவர் கதையை ரசித்ததோடு இந்த படத்தை தானே தயாரிப்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். இது ஒரு பான்- இந்தியா படம் என்பதால் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் ஆகியோர் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகிற டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது.

Categories

Tech |