Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கியது உணவு வழங்கும் திட்டம்…. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில்வே துறை அறிவிப்பு….!!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு மீண்டும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்திய ரயில்வே துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட்டுகள் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த தளர்வுகள் காரணமாக தென்னக இரயில்வே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் கொரோனா பெரும் தொற்று காரணமாக ரயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்தை மீண்டும் ரயில்வே துறை கையில் எடுத்துள்ளது. இனி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு உணவுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |