Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செத்துக் கிடந்த ஆடு…. பதிவாகி இருந்த கால்தடங்கள்…. உறுதிப்படுத்திய வனத்துறையினர்….!!

சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வரதம்பாளையம் மகா காளியம்மன் கோவில் தோட்டத்தில் விவசாயி ஞானசேகரன் வசித்து வருகிறார். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஞானசேகரன் ஆடுகளை பார்ப்பதற்காக அது கட்டப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனவர் பெர்னார்ட் வன ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டை கொன்றது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இவ்வாறு ஆடுகள் இங்கு இருப்பதை சிறுத்தை தெரிந்துகொண்டதால் மீண்டும் அங்கு வரலாம் என்று கூறிய வனத்துறையினர் அதை கண்காணிக்க அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி உள்ளனர்.

Categories

Tech |